அழகு நிலையங்களின் தந்திரம்...!! சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில், ப்ரீபெய்ட் அழகு சேவைகள் தொடர்பான நுகர்வோர் இழப்புகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகரித்து $108,000 வரை உயர்ந்துள்ளதாக சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்தின் (CASE) தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட பணியில் ஏற்பட்ட S$19,000 இழப்புகளை விட 464 சதவீத அதிகரிப்பாகும்.இது கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது என சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் (CASE) இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளது.
ASE விளக்குவதாவது, அழகு நிலையங்களின் ஆக்கிரமிப்பு விற்பனை அல்லது தவறான வணிக நடைமுறைகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் நுகர்வோர்களை வலுக்கட்டாயமாக ஒப்பந்தங்களில் கையெழுத்தெழுத்தச் செய்யும் நடைமுறை, தோராயமாக 28% புகார்களுக்கு காரணமாக உள்ளது.
இந்த நிலையில், ஆன்லைன் பயண நிறுவனங்களுக்கும் எதிரான புகார்கள் சுமார் 40% அளவில் அதிகரித்துள்ளன.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக நுகர்வோர் புகார்களின் எண்ணிக்கை 19 சதவீதம் குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 6,253 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் பதிவான 7,721 புகார்களுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.
CASE, கடந்த 2024 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்களை நினைவூட்டியது. குறிப்பாக, ஸ்கை லான்டர்ன் விழா பாதுகாப்பு காரணங்களால் நிறைவேறாமல் போனது 400க்கும் மேற்பட்ட புகார்களை உருவாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிக புகார்கள் பெற்ற முக்கிய ஐந்து பிரிவுகள்: