பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!!

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!!

சிங்கப்பூர்: NTUC FairPrice நிறுவனத்தின் பெயரில் பரவும் போலி பரிசு அறிவிப்புகள் குறித்து நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் வாட்ஸ்அப்பில், “ஆன்லைன் கேள்வித்தாளை நிரப்பினால் NTUC FairPrice இலிருந்து S$4,000 பரிசு வெல்லலாம்” என்ற தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இது முழுக்க முழுக்க ஒரு மோசடி விளம்பரம் என்று நிறுவனம் பேஸ்புக் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த கேள்வித்தாள்கள் மற்றும் NTUC FairPrice நிறுவனத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனம் பொதுமக்களுக்கு பயனர்பெயர், கடவுச்சொல்,வங்கி விவரங்கள் போன்ற நிதி தொடர்பான தகவல்களை SMS,whatsapp அல்லது பிற வழிகளில் கேட்காது என்று உறுதி செய்துள்ளது.

FairPrice தயாரிப்புகள் மற்றும் விளம்பரங்கள் குறித்து அறிய, அதிகாரப்பூர்வ செயலி அல்லது வலைத்தளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான செய்திகள் கிடைத்தால், 6380 5858 என்ற எண்ணை அழைக்கவோ அல்லது general.feedback@fairprice.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவோ பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan