சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்பில் சேர்க்கப்பட்ட மூன்று குறும்படம்...!!!

சிங்கப்பூர்: டெமாசெக் பாலிடெக்னிக்கின் டிஜிட்டல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையின் பட்டதாரிகளால் தயாரிக்கப்பட்ட மூன்று விருது பெற்ற குறும்படங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானப்பொழுது போக்கு அமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
அவை உள்ளூர் படைப்பாற்றல் மற்றும் அதிநவீன முன்னோக்குகளை வெளிப்படுத்துவதாகும்.
இந்த மூன்று குறும்படங்களும் தி க்ரோ பார் விருதுகள் மற்றும் நியூயார்க் விழாக்கள் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகளில் இருந்து அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
🔷முதல் குறும்படம்: பஹாய்
✓இந்த படம் சிங்கப்பூரில் தனது அடையாளத்தை ஆராயும் ஒரு பிலிப்பைன்ஸ் சிறுவனின் கதையை கூறுகிறது.
✓இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜீ யூ, தனது சொந்த அனுபவங்களால் இந்த படம் ஈர்க்கப்பட்டது என கூறினார்.
✓குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களின் கண்ணோட்டங்களை வளப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்களின் எதார்த்தத்தையும் மேம்படுத்தியதாக ஜேசன் கூறியுள்ளார்.
🔷இரண்டாவது குறும்படம்: லவ் ஆஃப் டிரடிஷன்
✓ஹாக்கர் மாஸ்டர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இடையிலான திறன்களை கடத்தும் கதையை கூறுவது இந்த படம்.
✓கோவிட் 19 தொற்று நோய்களின் போது ஹாக்கர் வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பல அறிக்கைகள் கவனம் செலுத்தி இருந்தாலும் ஹாக்கர் கலாச்சாரத்தின் பின்னணியில் உள்ள ஆழமான அர்த்தத்தை வேறு ஒரு கண்ணோட்டத்தில் ஆராய விரும்புவதாக இயக்குனரும் இணை எழுத்தாளருமான ஷூ ஷுனிங் கூறினார்.
✓மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் பட்டம் பெற்றதாகவும் அதனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் குறும்படங்களை பார்க்க முடியும் என்பதை அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டதாகவும் ஷூ ஷுனிங் கூறினார்.
✓பட்டதாரிகளின் படைப்புகளை காட்சிப்படுத்துவதற்கான தலங்களை தொடர்ந்து கண்டறிந்ததற்காக பள்ளிக்கு தனது சிறப்பு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
🔷மூன்றாவது குறும்படம்: தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உறவை சரி செய்ய முயற்சிக்கும் ஒரு கலப்பு தற்காப்பு கலை போராளியின் மனதை தொடும் கதையை கூறுகிறது.
இந்த மூன்று குறும்படங்களும் ஜூலை முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பொழுதுபோக்கு அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 வரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பயணிகள் பார்க்கும்படி இந்த மூன்று குறும்படங்களும் திரையிடப்படும்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
