சிங்கப்பூரில் எச்சரிக்கை ஒலி..!!!
ஏன்? எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சிங்கப்பூர்: செப்டம்பர் 15ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சிங்கப்பூர் முழுவதுமாக பொது எச்சரிக்கை மூன்று விதமாக ஒலி ஒலிக்கப்படும் என்ற தகவலை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அறிவித்துள்ளது.
மூன்று விதமான ஒலிகளின் பெயர்கள்: 💠 அபாய ஒலி 💠 முக்கியச் செய்தி என்பதை குறிக்கும் ஒலி 💠 நிலைமை சீரானதை குறிக்கும் ஒலி
எச்சரிக்கை ஒலியானது ஒரு நிமிடத்திற்கு நீண்டு ஒலிக்கும் எனவும் அதைக் கேட்டு அச்சமடைய வேண்டாம் என்றும் பொதுமக்களை சிங்கப்பூர் குடியுரிமை தற்காப்பு படை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கை ஒலியானது SG Secure என்கிற கைபேசி செயலியில் 20 வினாடிகளுக்கு தொடர்ந்து ஒலிக்கப்படும் என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை நேற்று (08/09/2025) தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டவுடன் பொதுமக்கள் அனைவரும் உள்ளூர் வானொலி கேட்க வேண்டும் அல்லது உள்ளூர் தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டும். இதன் மூலம் பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.