தேசிய கலைக்கூடம் மீண்டும் திறப்பு..!!!

தேசிய கலைக்கூடம் மீண்டும் திறப்பு..!!!

சிங்கப்பூர்: நேற்று(09/09/2025) காலை அருங்காட்சியகத்தின் ஊழியர்களுக்கான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விபத்து ஏற்பட்டதை அடுத்த சிவில் பாதுகாப்பு படையினர் இந்த இடத்திற்கு சென்று கேலரியின் முதல் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு பலகத்தில் ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளது.

சிவில் பாதுகாப்பு படை விசாரணைக்குப் பிறகு, அருங்காட்சியகம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தது.

அருங்காட்சியகம் மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையாளர் பக்கத்தில் வெளியிட்டது. நேற்று (09/09/2025) பகுதி அளவு மூடப்பட்டிருந்த தேசிய கலைக்கூடம் இன்று(10/09/2025) முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan