விஞ்ஞானிகளை அசரவைத்த அழகு.!!ஆழ்கடலில் மறைந்திருந்த இயற்கையின் அதிசயம்…!!!

விஞ்ஞானிகளை அசரவைத்த அழகு.!!ஆழ்கடலில் மறைந்திருந்த இயற்கையின் அதிசயம்...!!!

மீன்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.. அதிலும் வண்ண நிற அழகு மீன்கள் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். மீன்களில் சில குறிப்பிட்ட வகையே நமக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் நாம் அறியாமல் எத்தனையோ வகையான வித்தியாசமான மீன்கள் இயற்கையின் படைப்பில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான மீனைத் தான் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பாலும் ஆழ்கடலின் தீவிர சூழலில் வாழும் உயிரினங்கள் தங்களை ஒளிரச் செய்யக்கூடியவையோ, வெளிப்படையாக மாறுவேடமிடக்கூடியவையோ ஆக இருக்கும். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு, இந்தக் கருத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான மெக்கன்சி கெரிங்கர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய வகை நத்தை மீனை (Careproctus coliculus) ஆழ்கடலில் கண்டுபிடித்துள்ளனர். இது, மக்கள் கற்பனை செய்த “வேற்றுகிரகவாசி” போன்ற தோற்றத்தை உடைய உயிரினம் அல்ல, மாறாக அழகான இளஞ்சிவப்பு நிற உடல், வட்டமான தலை, பெரிய கண்கள் கொண்ட மென்மையான தோற்றமுடைய மீன்.

கெரிங்கர் இதனை “மிகவும் அழகாக” இருப்பதாகக் கூறி, குளிர்சாதன பெட்டியை விட குளிர்ச்சியான சூழல் மற்றும் சதுர அங்குலத்திற்கு 15,000 பவுண்டுகளுக்கும் மேல் அழுத்தம் காணப்படும் ஆழ்கடலில் கூட வாழும் சக்தி பெற்றது என்பதை வியப்புடன் தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சி குழு, பருக்கள் நிறைந்த இந்த வயது வந்த பெண் வைப்பர்ஃபிஷ், மனித கையின் நீளத்திற்கு சமமானதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதன் தோற்றம் மற்றும் மரபணுக்களை ஆய்வு செய்த பிறகு, இது முற்றிலும் புதிய இனமாக இருப்பதை உறுதிப்படுத்தி, ஆகஸ்ட் இறுதியில் Ichthyology & Herpetology இதழில் தங்கள் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.

Liparidae குடும்பத்தைச் சேர்ந்த நத்தைமீன்கள், பல்வேறு சூழல்களில் வாழும் தன்மையுடையவை. சில ஆழமற்ற அலைக் குளங்களில் காணப்படுகின்றன, சில கடலின் ஆழமான பகுதிகளில் வாழ்கின்றன. அவற்றின் உடலமைப்பில் பொதுவாக பெரிய தலை, மென்மையான ஜெல்லி போன்ற உடல் காணப்படும்.

சில இனங்கள் தங்கள் வயிற்றில் உள்ள உறிஞ்சும் கோப்பைகளைப் பயன்படுத்தி பாறைகளில் ஒட்டிக் கொள்வதோ, பெரிய கடல்விலங்குகளுடன் இணைந்து பயணம் செய்வதோ வழக்கமாகக் காணப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு, ஆழ்கடலின் “அதிசய உலகம்” இன்னும் எத்தனை ரகசியங்களை வைத்திருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.