இந்த நீச்சல் போட்டியானது உடற்குறைபாடு உள்ளவர்களுக்கு நடத்தப்படுகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த உடற்குறைபாடு உள்ள நீச்சல் வீரரான கொலீன் சூனுக்கு தொடக்க விழாவின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
நீச்சல் போட்டியின் மூலம் அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையாகவும், இதன் மூலம் முன்னேற்றம் அடைய ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று கலாச்சார சமூக இளைஞர் துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நீயோ கூறியுள்ளார்.
இந்த நீச்சல் போட்டி நடத்துவதன் மூலம் உடற்குறை உள்ளவர்களுக்கான விளையாட்டுகளின் மேம்பாட்டிற்காக நிறைய நாடுகள் ஆதரவளிக்கும் எனவும் திரு நியோ கூறியுள்ளார்.
ஒலிம்பிக்கில் 7 முறை தங்கம் வென்ற உடற்குறைபாடு உள்ள நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ சிங்கப்பூரை சேர்ந்தவர்.