போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இளைஞர்..!!!

போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இளைஞர்..!!!

சிங்கப்பூர்: தெக் வாய் லேன் அருகே 08.11.25 அன்று பிற்பகல் 2.50 மணியளவில் நடந்த சாலை விபத்தில் 83 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 29 வயது கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கார் இரண்டு மூதாட்டிகளை மோதியதாக கூறப்படுகிறது. இருவரும் உடனடியாக Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் கடுமையாக காயமடைந்து சுயநினைவை இழந்த நிலையில் பின்னர் உயிரிழந்தார்.

விசாரணையில், ஓட்டுநரின் காரில் மின்-சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் போதையில் கவனமின்றி வாகனம் ஓட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) விசாரணை நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK