சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சந்திக்கும் முக்கியமான ஏழு பிரச்சனைகள் என்ன என்று தெரியுமா..??

சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு பல விதமான பாஸ்கள் உள்ளது.
1.E- Pass
2.S-Pass
3.NTS Permit
4.Work Permit
5.TEP
6.Shipyard Permit
இவை அனைத்திலும் பொதுவாக ஒரு சில பிரச்சனைகளை வெளிநாட்டு ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர். அவைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1.Room
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகளில் அவர்கள் வேலை செய்யும் Pass க்கு தகுந்த மாதிரி அவர்கள் தங்கும் அறையும் விதிமுறைகளும் மாறும். உதாரணமாக, S.pass,E.Pass ல் வேலை செய்பவர்கள் கட்டாயமாக HDB ல் தான் தங்க வேண்டும். அவர்கள் Dormatery இல் தங்க முடியாது.
அதேபோல் work permit,pcm Permit,Shipyard Permit ல் உள்ளவர்கள் கட்டாயமாக Dormitery இல் தான் தங்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் தற்பொழுது தாங்கள் தங்கும் அறையை நிச்சயமாக மனிதவள அமைச்சில் பதிவு செய்து இருக்க வேண்டும்.
தற்பொழுது ரூம்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருப்பதாலும் மற்றும் மனிதவள அமைச்சில் பதிவு செய்ய காலதாமதம் ஆகிறது என்பதாலும் ஒரு சிலருக்கு விசா வந்தும் சிங்கப்பூர் செல்ல முடியாமல் காத்திருக்கின்றனர்.
PCM Permit,Shipyard Permit இல் சொல்பவர்களுக்கு ஒரு சில கம்பெனிகள் ரூமிற்கான தொகையை worker சம்பளத்தில் கழிக்கின்றனர்.
E.Pass,S.pass ல் ரூம்களின் வாடகை மிகவும் அதிகமாக இருப்பதால் அவர்களும் இந்த பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
2.Transport
ட்ரான்ஸ்போர்டும் வெளிநாட்டு ஊழியர்களின் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
S.pass,E.pass ல் வேலைக்கு வரும் பொழுது ஊழியர்களிடம் அவர்களின் Transport செலவுகள் பற்றி ஏஜென்ட்கள் சொல்வது கிடையாது.
ஒரு சில கம்பெனிகள் அவர்களின் ஊழியர்கள் அறையில் இருந்து வேலை இடத்திற்கு செல்வதற்கான ட்ரான்ஸ்போர்ட் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றன.
ஒரு சில கம்பெனிகள் அவர்கள் சம்பளத்தில் ஊழியர்களே தங்கள் டிரான்ஸ்போர்ட் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
Work Permit,Shipyard Permit,PCM PERMIT இதில் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வேறு வெளிநாட்டு ஊழியர்கள் இதற்கு பணம் செலவு செய்யத் தேவையில்லை. ஆனால் அவர்கள் தங்கும் விடுதியில் இருந்து வேலை இடத்திற்கு செல்வதற்கு அதிகப்படியாக பயன்படுத்துவது லாரிகளே மழை நேரங்களில் அவர்கள் நனைந்து கொண்டே தான் பயணம் செய்கின்றனர்.
ஆனால் ஒரு சில கம்பெனிகள் தற்போது பேருந்தில் ஊழியர்களை அழைத்துச் செல்லும் அளவிற்கு மாற்றம் வந்துள்ளது.
அனைத்து கம்பெனிகளும் செலவை பொருட்படுத்தாமல் இதேபோல் பேருந்தில் ஊழியர்களை அழைத்துச் சென்றால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
3.Food
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு என்பது சிங்கப்பூரில் மிகவும் ருசியாக எதிர்பார்க்க முடியாது. அப்படி எதிர்பார்த்தால் அதற்காக அவர்கள் சம்பளத்தில் பாதியை செலவு செய்ய வேண்டியது வரும்.
ஒரு சில இடங்களில் அவர்கள் சமைத்துக் கொள்ளலாம். அப்படி சமைத்துக் கொண்டாலும் அவர்கள் 12 மணி முதல் 13 மணி நேரம் வரை வேலை செய்து வந்தால் சமைப்பதற்கு நேரம் இருப்பதில்லை.
ஒரு சிலர் மாதாந்திர உணவை தேர்வு செய்தால் மிகவும் தொகை கம்மியாக இருந்தாலும் அந்த தொகைக்கு ஏற்றார் போல் உணவுத் தரம் மற்றும் சுவை குறைவாகவே இருக்கும்.
நீங்கள் சிங்கப்பூரில் நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் பெரிதாக உங்களால் பணத்தை சேமிக்க முடியாது. அதனால் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு வேலை செய்து கொண்டு வருகின்றனர்.
4.Working time
முன்பெல்லாம் சிங்கப்பூரில் வேலை என்பது எட்டு மணி நேரமாக மட்டுமே இருந்தது. ஆனால் இப்பொழுது ஒரு சில கம்பெனிகள் மாதாந்திர சம்பளம் கொடுத்து 12 மணி நேரம் வேலை என்று சொல்லி விடுகின்றனர்.
எட்டு மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் வேலை செய்தால் அது உங்களுக்கு ஓவர் டைம் ஆக கணக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் 12 மணி நேரத்திற்கு மாத சம்பளம் பேசுவதால் உங்களுக்கு ஓவர் டைம் என்பது கிடைப்பது கடினம்.
குறிப்பாக E.Pass,S.Pass,NTS Permit ல் ஒரு சில கம்பெனிகளில் தற்பொழுது இது அதிகமாக நடைபெற்று வருகிறது.
5.Salary
இந்த பிரச்சனை வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் நீண்ட நாட்கள் ஆகவே இருந்து வருகிறது. என்னதான் மனிதவள அமைச்சு சம்பளத்தை உயர்த்தி கொடுத்தாலும் பல கம்பெனிகள் அதை முறையாக பின்பற்றுவது இல்லை.
குறிப்பாக E.pass மற்றும் S.pass ல் அவர்களின் விசாவில் போட்டிருக்கும் சம்பளத்தை பெரும்பாலான கம்பெனிகள் கொடுப்பது கிடையாது.
Work permit, PCM Permit, Shipyard Permit இல் ஒரு சில கம்பெனிகள் ஊழியர்கள் எத்தனை ஆண்டு வேலை செய்தாலும் சம்பளத்தை உயர்த்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
6. Course
வெளிநாட்டு ஊழியர்கள் பொதுவாக சிங்கப்பூரை அதிகம் விரும்புவதற்கு முக்கியமான காரணம் நீங்கள் அங்கு ஜெனரல் ஒர்க்கராக போனாலும் காலப்போக்கில் நீங்கள் அங்கே உள்ள Course களை படித்தீர்கள் என்றால் உங்களின் தகுதி மட்டுமில்லாமல் சம்பளமும் உயரும்.
ஆனால் இது தற்பொழுது சற்று கடினமாகியுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு சில கம்பெனிகள் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது தெரிந்தால் உங்களை ஊருக்கு ஏற்றி விடுகிறார்கள். ஏனென்றால் நீங்கள் லைசன்ஸ் எடுத்த பிறகு அங்கு வேலை செய்ய மாட்டீர்கள் என்ற எண்ணத்தால் முன்பெல்லாம் கம்பெனிகளே பணம் கட்டி அவர்களுக்கு தேவையான கோர்ஸை அவர்களது ஊழியர்களை செய்ய வைத்தனர். ஆனால் தற்பொழுது இது குறைந்துள்ளது. எனவே ஊழியர்கள் இதிலும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
7.Agent
வெளிநாட்டு ஊழியர்களுக்கு இருப்பதிலேயே மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது ஏஜெண்டுகள் தான். ஒரு சில நல்ல ஏஜென்ட்கள் இருந்தாலும் பெரும்பாலான ஏஜென்ட்கள் வெளிநாட்டு ஊழியர்களை அவர்கள் சுய லாபத்திற்காக சம்பளம் மற்றும் வேலை விவரங்களை பொய்யாக கூறி அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
அதற்காக அதிக தொகையும் வாங்கிக் கொள்கின்றனர். இங்கே வரும் வெளிநாட்டு ஊழியர்கள் ஏஜெண்டுகள் சொன்ன வேலை மற்றும் சம்பளம் எதுவும் இல்லை என்று தெரிந்து மிகவும் மன வேதனைக்கு உள்ளாகின்றனர். ஆனால் அவர்கள் பணத்தை இந்தியாவில் கட்டி விட்டு வருவதால் மனிதவள அமைச்சால் அவர்களுக்கு பணத்தை வாங்கித் தரவும் முடியாது.
இதில் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலானோர் கடுமையான மன உளைச்சலுக்கும் பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர்.
நாம் கூறிய இந்த ஏழு பிரச்சனைகளில் ஏதாவது ஒரு பிரச்சனையாவது சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களிடையே நிச்சயமாக நீங்கள் பார்க்க முடியும். இதை சரி செய்வதற்கு மனிதவள அமைப்பு பல புதிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் உள்ளது.
இதை முறையாக கம்பெனிகள் பின்பற்றும் பட்சத்தில் இந்த அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு வெளிநாட்டு ஊழியர்களின் நலன் காக்கப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி செய்ய பல தொண்டு நிறுவனங்களும் சிங்கப்பூரில் உள்ளது உங்களுக்கு பிரச்சனை என்றால் நிச்சயமாக நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
