சிங்கப்பூரில் கார் திருட்டு சம்பவம்..!! 15 வயது உடைய 5 இளைஞர்கள் கைது..!!

சிங்கப்பூரில் கார் திருட்டு சம்பவம்..!! 15 வயது உடைய 5 இளைஞர்கள் கைது..!!

சிங்கப்பூரில் 2 வாகனங்களை திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட 5 இளைஞர்களக் காவல்துறை கைது செய்துள்ளது.

அவர்கள் மீது இன்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பொங்கோல் 17ஆவது அவென்யூ பகுதியில் கடந்த 6-ஆம்தேதி மாலை சுமார் 4:35 மணியளவில் 2 கார்கள் திருடப்பட்டு உள்ளது சம்பந்தமாக தங்களுக்கு புகார் கிடைத்ததாக காவல்துறை நேற்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணை நடத்தியதில் சிசிடிவி மற்றும் காவல்துறை கேமரா காட்சிகளைக் காவல்துறை ஆய்வு செய்துள்ளது. விசாரணையின் முடிவில் அதிகாரிகள் 4 இளைஞர்கள் மற்றும் 1 பெண்ணின் அடையாளங்களை உறுதி செய்து அவர்களை நேற்று (ஜூன் 9) கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் வாகனத்தை ஓட்டி சென்ற போது சோதனை ஓட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் யாரிடமும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லைஎன்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த இளைஞர்களில் 4 பேர் மீது 1871 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டத்தின் 379 A பிரிவின் கீழ் வாகனத் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் இன்று (ஜூன் 10) வழக்குப்பதிவு செய்யப்படும். அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.


மற்ற இளைஞரான 15 வயது உடையவர் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக கூறப்படுகிறது.

வாகனங்களை நன்கு வெளிச்சம் உள்ள இடங்களில் நிறுத்துவது ,கார் சாவிகள் அல்லது மின்னணு சென்சார்களை ஆங்காங்கே போட்டு வைக்காமல் இருப்பது, வாகனத்தை விட்டு செல்வதற்கு முன் மதிப்புமிக்க பொருட்களை அதிலிருந்து வெளியே எடுப்பது மற்றும் வாகனத்தை சிறிது நேரம் மட்டுமே விட்டுச் சென்றாலும் கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டுவதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாகன உரிமையாளர்கள் மேற்கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK