சிங்கப்பூர் – சீனா இடையே நடைபெறும் முக்கிய பேச்சுவார்த்தை..!!
சிங்கப்பூரும் சீனாவும் பொருளாதாரம், பசுமை மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்பு, மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகிய மூன்று துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்–சீனா இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவையொட்டி, இன்று (14.12.25) சீனாவின் சோங்கிங்கில் நடைபெறும் 21வது JCBC சந்திப்பிற்கு, சீன துணைப் பிரதமர் டிங் சூசெக்ஸியாங்குடன் இணைந்து அவர் தலைமை தாங்குகிறார்.
உலகளவில் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் வேகமான தொழில்நுட்ப மாற்றங்கள் நிலவும் நிலையில், இரு நாடுகளும் ஒத்துழைப்பின் உறுதியான அடித்தளத்தை பேணி எதிர்கால வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.
எதிர்காலத்தில், உலக மாற்றங்களுக்கு ஏற்ப சிங்கப்பூர்–சீனா கூட்டாண்மை விரிவடைந்து, பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.