சிங்கப்பூரில் புதிய கம்ப்யூட்டர் அறிமுகம்..!!

சிங்கப்பூரில் புதிய கம்ப்யூட்டர் அறிமுகம்..!!

சிங்கப்பூர் தேசிய மீக்கணினி மையம் (NSCC) தன் புதிய மற்றும் அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர் ஆன Aspire 2B ஐ அறிமுகம் செய்துள்ளது.

இந்த கம்ப்யூட்டர் முந்தைய மாடல்களை காட்டிலும் நான்கு மடங்கு அதிக செயல்திறன் கொண்டது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் பருவநிலை மாற்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும்.

Aspire 2B யின் சூப்பர் கம்ப்யூட்டரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இது முந்தைய தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டர்களான Aspire 2A மற்றும் 2A+ ஆகியவற்றின் ஒட்டுமொத்த திறனை விட சுமார் நான்கு மடங்கு கூடுதல் கணக்கிட்டு ஆற்றலை கொண்டுள்ளது.

இந்த மீல் கணினி 1500க்கும் அதிகமான Nvidia H200 பிராசஸ்ர்களை கொண்டு இயங்குகிறது.

சுகாதாரம், பருவநிலை மாதிரியாக்கம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற அதிநவீன துறைகளில் உள்ள சிக்கலான ஆய்வுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்த புதிய ASPIRE 2B சூப்பர் கம்ப்யூட்டர் ஆனது அமெரிக்காவின் குவான்டினம் நிறுவனம் சார்பில் சிங்கப்பூரில் நிறுவப்பட உள்ள Helios குவாண்டம் கணினியுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த இரட்டை தொழில்நுட்ப கட்டமைப்பு மூலமாக ஆராய்ச்சியாளர்களால் சாதாரண கம்ப்யூட்டர்களால் தீர்க்க முடியாத மிகவும் கடினமான சிக்கல்கள் தீர்வு காண மிகவும் உபயோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்துகின்ற நிகழ்ச்சியில் தகவல் மின் இலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ கலந்து கொண்டார். வெளிநாடுகளுக்கான ஆய்வுப் பணிகளை இனி இந்த கணினியை கொண்டு உள்ளூரிலேயே செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

மோசமான வானிலை குறித்து எச்சரிப்பது முதல் புற்றுநோயாளிகளுக்கு குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளை பரிந்துரைப்பது வரை பலவற்றையும் இந்த கணினியால் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK