சிங்கப்பூரில் டிக் டாக் விளம்பர மோகத்தால் பணத்தை இழந்த நபர்..!! நீதிமன்றம் கொடுத்த பதிலடி என்ன..??
சிங்கப்பூரில் டிக் டாக் மோகத்தில் இருந்த ஒரு நபர் அதில் வந்த விளம்பரத்தை கிளிக் செய்து ஒரு பொருளை வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரது கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை ஒரு இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பின்னர், 2024 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி அன்று இரவு சுமார் 11 15 மணியளவில் ஆப்பிள் பே என்ற செயலியில் கார்டை சேர்க்க வாங்கி அனுப்பிய பல ஒரு முறை கடவுச்சொல் (OTP) எண்களை கவனித்துள்ளார்.
கடன் அட்டை கணக்கில் இருந்து 22 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக வங்கியின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறு வங்கியின் மூலமாக வந்த தொடர் எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்திகளையும் பரிவர்த்தனை அறிவிப்புகளையும் அவர் பார்த்துவிட்டு அதை அலட்சியமாக நினைத்து கவனிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் அவர் இழந்த மொத்த தொகையானது 430,000 யென் ஆகும். சிங்கப்பூர் நாணய மதிப்பின்படி $3,8111.72 ஆகும். இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அவருக்கு சந்தேகம் எழுந்து சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைக்குரிய எண்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அது பலனளிக்கவில்லை.
இதனை எடுத்த இவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இறுதியாக நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு இது முழுக்க முழுக்க மிகப்பெரிய அலட்சியம் ஆகும். பணத்தை இழந்தது முழு பொறுப்பும் பாதிக்கப்பட்ட நபரையே சாரும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பண மோசடி தொடர்பில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள்: நீங்கள் செய்யாத எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் அல்லது சந்தேகத்திற்கு இடமான ஏதேனும் லிங்குகள் வந்தாலும் ஒருபோதும் அதை தொட வேண்டாம். மேலும் அதில் இருந்து ஏதேனும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) வந்தால் அது யாருக்கும் பகிர வேண்டாம்.
உங்கள் தொலைபேசி எங்களுக்கு வரும் வங்கி அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை உடனடியாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் வருகின்ற பரிவர்த்தனைகளை மட்டுமே நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் அந்த தளங்கள் மூலம் மட்டுமே நீங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் நிதி தொடர்புடைய கூடுதல் தகவல்களை Scam Alert SG அல்லது சிங்கப்பூர் காவல்துறை மூலமாக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.