சிங்கப்பூரில் ஓர் புதிய அறிவிப்பு!!

சிங்கப்பூரில் ஓர் புதிய அறிவிப்பு!!

சிங்கப்பூரில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டோர் இனி இரவு நேரங்களில் டயலாசிஸ் சிகிச்சையை செய்து கொள்ள தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

இரவு நேரங்களில் டயலாசிஸ் சிகிச்சையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தேசியச் சிறுநீரக அறநிறுவனம் அதன் நிலையங்களில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் 55-வது ஆண்டு விழாவையொட்டி அறிவித்தது.

சிங்கப்பூரில் இரவு நேரங்களில் டயலாசிஸ் செய்து கொள்ளும் சிகிச்சை 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சிங்கப்பூரில் பொதுவாக பகல் நேரங்களில் டயலாசிஸ் செய்து கொள்வதற்கு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகும்.

அது இரவு நேரங்களில் ஆறு முதல் ஏழு மணி நேரங்கள் வரை நீடிக்கும்.

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் செய்து கொள்ளும் டயலாசிஸ் சிகிச்சையானது இதயத்தில் அதிக அழுத்தம் கொடுக்காமல் நச்சு மற்றும் திரவத்தை அகற்ற உதவும்.

இரவு நேரங்களில் செய்யப்படும் சிகிச்சையில் நோயாளிகள் உறங்குவதற்கு உதவுகிறது.

இத்தகைய சேவைகளை 2027-ஆம் ஆண்டுக்குள் அதன் செயல்படும் இடங்கள் 250 ஸ்லாட்களாக உயர்த்தப்படும். தற்போது 36 இடங்களில் இத்தகைய சேவை செயலில் உள்ளது.