ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பில் புதிய மைல்கல்..!!


சிங்கப்பூர்: சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது,
ஆசியான் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளும் கூட்டாளி நாடுகளும் பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இது ஆசியான் பொருளாதார ஒருங்கிணைப்பில் புதிய அத்தியாயமாகும்.
மேம்படுத்தப்பட்ட “ஆசியான் பொருட்கள் வர்த்தக ஒப்பந்தம்” மற்றும் “ஆசியான்–சீனா சுதந்திர வர்த்தக பகுதி 3.0” ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவை எல்லைத் தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்கி, சுங்க நடைமுறைகளின் திறனை மேம்படுத்துவதோடு, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் கூறியதாவது, இந்த புதிய தலைமுறை ஒப்பந்தங்கள் ஆசியான் நாடுகளில் வணிக வளர்ச்சிக்கும், உலகப் பொருளாதார மையமாக உருவாகும் முயற்சிக்கும் வலுவாக துணைநிற்கும் என தெரிவித்தார்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
