அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!
அமெரிக்காவில் வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு கத்திக்குத்து சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர்.
காயமடைந்தவர்களில் 5 பேர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் அடங்குவர். இந்த சம்பவமானது ஏப்ரல் 30ஆம் தேதியன்று நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
வாஷிங்டனில் டகோமாவில் உள்ள ஃபோஸ் உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 30 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணிக்கு இந்த சம்பவம் ஆவது நடைபெற்றுள்ளது. இது மோதலால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கத்திக்குத்து காயங்களால் காயமடைந்தவர்களில் 4 மாணவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டகோமா தீயணைப்புத்துறையின் பேச்சாளர் செல்சி ஷெப்பார்ட் கூறியுள்ளார்.
மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த கத்திக்குத்து சம்பவமானது பள்ளியின் வளாகத்திற்குள் நடைபெற்று இருப்பதாகவும், தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தபோது காயமடைந்தவர்களில் ஒருவர் பள்ளிக்கு வெளியே கிடந்ததாகவும் செல்சி தெரிவித்திருக்கிறார்.