துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! பிடிபட்ட மலேசியா லாரி..!!!

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி...!!! பிடிபட்ட மலேசியா லாரி..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகள் 2,400 கடத்தப்பட்ட மின்-சிகரெட்டுகள் மற்றும் துணைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

குடிவரவுத் துறையின் ஒருங்கிணைந்த இலக்கு மையத்தின் (ITC) ரகசிய தகவலைத் தொடர்ந்து, துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகள் நேற்று முன்தினம் (29 ஆம் தேதி)சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை சோதனையிட்டது.

இந்த தகவலை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

அதிகாரிகள் விசாரித்த போது அந்த லாரியில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் இருப்பதாக லாரி ஓட்டுநர் கூறினார்.

ஆனால் அதிகாரிகள் சோதனையிட்டதில் டிரெய்லர் சேசிஸுக்கு மேலே உள்ள பிளாட்பெட் கட்டமைப்பிற்குள் 2,400 மின்-சிகரெட்டுகள் மற்றும் அதன் தொடர்புடைய பாகங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த பொருட்கள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர் விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சட்டவிரோதமான இறக்குமதிகளை முறியடிக்க ICA மற்றும் HSA இணைந்து செயல்படுவதை இது வெளிப்படுத்துகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan