சிங்கப்பூர்: உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (29.08.25) நடைபெற்ற வழக்கமான சோதனையின் போது, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாடகை காரின் டிக்கியில் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் இருப்பதை துணை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 34 அட்டைப்பெட்டிகளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் 18 இ-சிகரெட்டுகள் தொடர்புடைய பாகங்களையும் பறிமுதல் செய்தனர்
இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறை மற்றும் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.