ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன??

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன??

தென் அமெரிக்காவின் சிலியில் பணி புரியும் பணியாளர் ஒருவருக்கு சம்பளத்தை விட கூடுதல் பணம் தவறாக சம்பள பட்டியலில் சேர்ந்துள்ளது.

330 மடங்கு சம்பளத்தை விட அதிக பணத்தை பணியாளர் பெற்றிருக்கிறார்.

165 மில்லியன் பெசோ (221,600 வெள்ளி) கூடுதலாக பணத்தை பெற்று இருக்கிறார்.

சம்பளத்தை விட அதிகமாக பெறப்பட்ட பணத்தை திருப்பி தர முடிவெடுத்த ஊழியர் திடீரென வேலையிலிருந்து விலகி உள்ளார்.

நிறுவனமானது அவரை தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் பதிலளிக்கவில்லை.

இதனால் ஊழியர் பணத்தை திருடிவிட்டதாக நிறுவனமானது அவர் மீது புகார் கொடுத்துள்ளது. இந்த விசாரணை ஆனது மூன்று ஆண்டுகள் நீடித்தது.

தற்போது இந்த வழக்கிற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

என்ன தீர்ப்பு?
தனக்குரிய பணத்தைவிட அதிக பணம் வைத்திருந்தால் அதை திரும்ப கொடுத்திட வேண்டும் என்று பல நாடுகளின் சட்டம் சொல்கிறது.

ஆனாலும் இந்த வழக்கைப் பொருத்தவரை பணியாளர் பணத்தை திருடவில்லை என்பதால் அந்த பணத்தை நிறுவனத்திடம் வழங்க தேவை இல்லை. ஊழியருக்கே அந்த பணம் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு வழங்கியதை அடுத்து நிறுவனமானது மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK