தங்கம் வாங்க போறீங்களா..?? UOB வங்கியின் முக்கிய அறிவிப்பு..!!

தங்கம் வாங்க போறீங்களா..?? UOB வங்கியின் முக்கிய அறிவிப்பு..!!

தங்கம் விலையானது தற்போது அதிகரித்து வருகின்ற சூழலில் UOB வங்கியானது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிபந்தனை யாருக்கு?
தங்கம் சார்ந்துள்ள பங்குகளில் செய்த முதலீடுகளை தங்க கட்டிகளாக மாற்ற விரும்புபவர்களுக்கு இவை பொருந்தும்.

இதற்கு செய்ய வேண்டியது?
பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த நிபந்தனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எங்கு தங்கம் வாங்குபவர்களுக்கு?
UOB வங்கியானது அதன் ராபில்ஸ் பிளேஸ் என்ற கிளையில் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் முன்பதிவு செய்து தங்கத்தை வாங்க வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து தங்கம் வாங்குவதற்கான நேரம் ஆனது வார நாட்களில் காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக விற்பனை வார நாட்களில் மாலை நான்கு முப்பது மணி அளவில் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நேரம் ஆனது நீட்டிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வாங்க வருபவர்கள் முன் பதிவில்லாமல் வந்தால் அனுமதி கிடையாது.

மேலும் தங்கத்தை வங்கியிடம் விற்பதற்கு முன்பதிவு தேவை இல்லை. பொது விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை 4:30 மணி வரை வங்கியில் வந்து தங்கம் வாங்கிக் கொள்ள முடியும் என்பதை UOB வங்கி கூறியுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வங்கியின் தங்கம் சார்ந்த பரிவர்த்தனையின் அளவானது கிலோகிராம் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ள நிலையில் 59% கூடியுள்ளதாக UOB வங்கி தெரிவித்திருக்கிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK