சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடுபவர்களா?

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடுபவர்களா? ஒர்க் பெர்மிட் அனுமதியை விரிவுப்படுத்தும் அறிவிப்பு! ஜூன் 1 முதல் நடைமுறை!
சிங்கப்பூர் அரசு ஒர்க் பெர்மிட் (Work Permit) திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி, Non-Traditional Source (NTS) நாடுகளின் பட்டியலில் புதிதாக மூன்று நாடுகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் ஜூன் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் (Ministry of Manpower – MOM) அறிவித்துள்ளது.
புதிய நாடுகள் சேர்ப்பு:
தற்போது NTS பட்டியலில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை, மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் ஜூன் 1, 2025 முதல் பூட்டான், கம்போடியா, மற்றும் லாவோஸ் ஆகிய மூன்று நாடுகளும் புதிதாக சேர்க்கப்பட
உள்ளன. இதன் மூலம், இந்த நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பணியாளர்களை ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியுடன் சிங்கப்பூரில் உள்ள முதலாளிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியும்.
மேலும், NTS பட்டியலில் பின்வரும் வேலைவாய்ப்புகளும் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது:
சமையல்காரர்கள் (Cooks)
கனரக வாகன ஓட்டுநர்கள் (Heavy Vehicle Drivers) – செல்லுபடியாகும் கனரக வாகன உரிமம் (Class 4 மற்றும் Class 5) வைத்திருக்கும் ஓட்டுனர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
உற்பத்தித் துறை ஆபரேட்டர்கள் (Manufacturing operators)
நடைமுறைக்கு வரும் தேதிகள்:
NTS நாடுகள் சேர்ப்பு: ஜூன் 1, 2025 முதல் பூட்டான், கம்போடியா, மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகள் NTS பட்டியலில் இணையும்.
புதிய தொழில்கள்: செப்டம்பர் 1, 2025 முதல் மேற்குறிப்பிட்ட தொழில்களில் ஒர்க் பெர்மிட் ஊழியர்களை பணியமர்த்தலாம்.
மனிதவள அமைச்சகம் (MOM) இந்த புதிய NTS வேலைவாய்ப்புகளுக்கான விரிவான வழிகாட்டுதல்களையும், தகவல்களையும் செப்டம்பர் 1, 2025-க்கு முன்னர் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் சிங்கப்பூரின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேலும் வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.
சிங்கப்பூரின் ஒர்க் பெர்மிட் திட்டத்தில் ஏற்படவுள்ள இந்த மாற்றங்கள், NTS நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளைத் திறக்கும். புதிதாக சேர்க்கப்படும் நாடுகள் மற்றும் தொழில்களின் மூலம், சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தை மேலும் வலுவடையும் என மனிதவள அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இந்த மாற்றங்கள் குறித்த முழு விவரங்களுக்கு MOM இணையதளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
