சிங்கப்பூரில் கவனக் குறைவால் ஏற்பட்ட கார் விபத்து..!!!

சிங்கப்பூரில் கவனக் குறைவால் ஏற்பட்ட கார் விபத்து..!!!

பூன் கெங் ரயில் நிலையத்திற்கு அருகே கார் விபத்து ஒன்று ஏற்பட்டது.

காரை இயக்கியவர் விளக்கு கம்பம் மீது கவனக் குறைவாக மோதியுள்ளார்.

இந்த விபத்து நேற்று (03/10/2025) இரவு சுமார் 9:10 மணிக்கு லாவண்டர் ஸ்ட்ரீட்டுக்கும் சிரங்கூன் ரோட்டுக்கும் இடையிலான சந்திப்பில் நடந்துள்ளது.

காரை ஓட்டி வந்த 37 வயது ஆடவர் மது போதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் 71 வயது முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தற்காப்பு படையினர் கூறியுள்ளனர்.

காரின் முன்புறமும் விளக்கு கம்பமும் சேதமடைந்துள்ளது. மேலும் சாலையில் கண்ணாடி சில்லுகள் சிதறி கிடப்பதை மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம்.

இந்த விபத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK