மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!!

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!!

மலேசியா: மே 9- ஆம் தேதி அன்று இரவு 11 மணி அளவில் நியூ கிள்ளாங் வேலி விரைவுச் சாலையில் (NKVE) கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கார் ஓட்டுநரான 26 வயது நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

அதிவேகப் பாதையில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கியக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வாகன மோதல் சம்பவம் தெரிகிறது. அதில் புரோட்டான் இன்ஸ்பிரா காரின் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மலேசிய ஆடவரின் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்குப் பின்பு கார் சாலையில் சற்று தூரம் சறுக்கி போய் வலது தளத்தில் நின்றுள்ளது.

அப்போது அதே தடத்தில் வேகமாக வந்த கார் ஒன்று அந்த காரின் மீது மோதியுள்ளது. அதனால் அது சுழன்று இடப்புறத்தில் முதலாவது தடத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

பிறகு சற்று நேரத்தில் இரண்டாம் தட்டத்தில் விரைவாக வந்த மற்றொரு வாகனமும் அந்த காரின் மீது மோதியுள்ளது. இதனால் இரு வாகனங்களும் சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதி கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

மே 9-ம் தேதி என்று இரவு 11 மணி அளவில் டூட்டா டோல் பிளாசாவை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 28-இல் இந்த சம்பவம் நடந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவுத் தலைவர் ஜம்சுரி ஈஷா தெரிவித்தார்.

இந்த கார் விபத்தில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஓட்டுநர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 42 (1) -ன் கீழ் இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளைப் பெறுதல், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் மற்றும் சம்பவ இடத்தைப் பார்வையிடுதல் போன்ற நடவடிக்கைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK