உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து..!! கார் ஓட்டுநர் கைது..!!
சிங்கப்பூர் : உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே சென்ற வாரம் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற 30 வயது கார் ஓட்டுநரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 10:50 மணியளவில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கி செல்லும் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் உட்லண்ட்ஸ் குறுக்குச் சாலைக்கு முன்னர் விபத்து நடந்துள்ளது.
ஒரு அடர்நிற செடான் கார் ஒன்று ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அந்த கார் ஓட்டுநர் வாகனப் பதிவு எண்னை அங்கேயே விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி உள்ளார்.
அந்த விபத்தில் 32 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம் அடைந்தது உள்ளார். அவரை சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிங்கப்பூர் குடிமைப் தற்காப்புப் படையினர் அனுமதித்து உள்ளனர்.
விரைவுச் சாலையின் முதல் தடத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வெள்ளை கார் ஒன்று கருப்பு கார் மீது மோதிய பின்னர் இரு கார்களும் நிற்பது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது.
வெள்ளை காரில் இருந்த ஓட்டுநர் இறங்குவதற்குள் கருப்பு கார் பின் நோக்கி சென்று இரண்டாவது தடத்தில் தப்பி செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் அந்த கார் மோதியது. மேலும் இரு வாகனங்களும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தப்பி உள்ளது.
இந்த இரு சம்பவங்களைச் செய்துவிட்டு அந்த கறுப்பு நிற கார் அங்கிருந்து தப்பி செல்வதும் அந்த கேமரா பதிவில் நன்றாக தெரிகிறது.
காவல்துறை அதிகாரிகள் தப்பி சென்ற ஓட்டுநரை தேடி வருவதாக தகவல் தெரிவித்திருந்ததனர். இந்நிலையில் கடமையான க் காயங்களை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியை குற்றத்திற்காக கார் ஓட்டுநர் நேற்று (மே 4) சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.