சிங்கப்பூரில் சர்ச்சையை ஏற்படுத்திய போர்ஷே கார் விவகாரம்..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் காரின் பின்புறத்தில் இரண்டு குழந்தைகள் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
SG Road Vigilante ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு இணையவாசி இந்த சம்பவத்தின் டேஷ்கேம் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவின்படி, இச்சம்பவம் அக்டோபர் 20 ஆம் தேதி காலை 10.40 மணியளவில் Dairy Farm Walk பகுதியில் நிகழ்ந்துள்ளது.
வீடியோவில், மஞ்சள் நிற போர்ஷே கார் குடியிருப்புப் பகுதி வழியாகச் செல்வதைக் காணலாம். அதில் இரண்டு சிறுவர்கள் காரின் பின்புற இறக்கை பகுதியில் அமர்ந்திருப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், அதே சம்பவத்தை வேறு கோணத்தில் படம் பிடித்த இன்னொரு வீடியோ Reddit தளத்தில் பரவியது.TikTok இல் @premroymotoring என்ற பயனரால் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளி, இரண்டு சிறுவர்கள் காரின் பின்புறத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அடுத்து, காரின் அருகில் நின்றிருந்த ஒரு நபர், “வாழ்க்கை மிகவும் சுருங்கியது,எதிர்கால தலைமுறையினர் தங்களுக்கு தேவையானதை தாங்களே சம்பாதிக்க வேண்டும் “என்று கூறுகிறார்.
அந்த TikTok கணக்கு கார் விற்பனை மற்றும் சரக்கு நிறுவனமான Prem Roy Motoring நிறுவனத்துக்குச் சொந்தமானது. தற்போது அது தொடர்புடைய வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், வீடியோவில் தோன்றும் நபர், அந்த நிறுவனத்தின் Instagram கணக்கில் உள்ள பிற பதிவுகளிலும் காணப்படுகிறார். அவரது LinkedIn சுயவிவரத்தின்படி, அவர் நிறுவனத்தின் நிறுவனர் பிரேம் ராய் எனத் தெரிகிறார்.
சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.