mm2 Asia நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி..!!!

mm2 Asia நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி..!!!

சிங்கப்பூர்:ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி, mm2 ஆசியா மற்றும் அதன் இரண்டு துணை நிறுவனங்கள் mm Connect மற்றும் Cathey cinemas ஆகியவற்றுக்கு S$905,582 நிலுவையில் உள்ள கடனை திருப்பிச் செலுத்தக் கோரி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.இந்த கடிதம் mm2 Asiaக்கு நேற்று (23.10.25) அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

mm2 Asia நேற்று(23.10.25)இரவு சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சின் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில்,வங்கி இந்த மாதம் 16ஆம் தேதி சட்டப்பூர்வ கடிதம் அனுப்பியதாகவும்,நிறுவனம் சட்ட ஆலோசனையை பெற்று நிலைமையை கவனித்துக்கொண்டும் இருக்கிறது என்றும் தெரிவித்தது.

நிறுவனம் மார்ச் 31, 2025 முடிவடைந்த நிதியாண்டில் S$122.4 மில்லியன் நிகர இழப்பை சந்தித்தது.இது முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட S$1.9 மில்லியன் இழப்பை விட அதிகமாகும்.அந்த காலத்தில், mm2 Asia தனது சினிமா வணிகத்தில் கோவிட்-19 பிறகு வருகை எண்ணிக்கை குறைவு, ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து கடுமையான போட்டி மற்றும் இயக்க லாப வரம்புகளைச் சமாளிப்பதில் சவால்களை எதிர்கொண்டு வந்தது.

மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி, mm2 Asia அதன் துணை நிறுவனம் Cathey cineplexes தன்னார்வ கலைப்பு நடைமுறைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தது. இதனால் நிதி சிக்கல்கள் மற்றும் மறுசீரமைப்பு விருப்பங்கள் இல்லாததால், Cathay இனி செயல்பட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK