இனி பாதுகாப்பான பயணம் உறுதி..!!SMRT களமிறக்கும் FBW இயந்திரம்..!!

இனி பாதுகாப்பான பயணம் உறுதி..!!SMRT களமிறக்கும் FBW இயந்திரம்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் SMRT நிறுவனத்தின் சுரங்கப்பாதை இயக்குநர்கள், ரயில் பாதைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்க புதிய ஃப்ளாஷ் பட் வெல்டிங் (FBW)இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இந்த இயந்திரத்தில் தானியங்கி செயல்முறைகள் மூலம் வெல்டிங் தரம் மேம்படுத்தப்படுவதால்,பாதை மாற்றங்கள் மிகவும் நிலையானதும் நம்பகத் தன்மையையும் கொண்டதாக இருக்கின்றன.

உலு பாண்டன் MRT பணிமனையில் ஊடகவியலாளர்கள் நேற்று (23.10.25) புதிய இயந்திரத்தை நேரில் பார்வையிட்டனர். ரயில்வே பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் குவான் ஜூன்வெய் கூறியதாவது, புதிய இயந்திரத்தின் மூலம் வெல்டிங் நேரம் முன்னதாக 40 நிமிடங்கள் ஆக இருந்ததை 15–20 நிமிடங்களாக குறைந்திருக்கிறது என்று கூறினார்.

மேலும், இதனால் மனிதவள தேவையும் குறைகிறது.முன்பு இரண்டு 18 மீட்டர் தண்டவாளங்களை வெல்டிங் செய்ய ஆறு பேர் தேவைப்பட்டனர்.புதிய இயந்திரத்துடன் இதை இரண்டு நபர்களால் செய்ய முடிகிறது. இதனால், பாதையின் நம்பகத்தன்மை மட்டுமல்ல, ஒட்டுமொத்த திறனும் 20% உயர்ந்திருக்கிறது.

FBW இயந்திரம் தானாக மின்னோட்டம், அழுத்தம் மற்றும் நேர அளவுருக்களை கட்டுப்படுத்தி, சீரான வெல்டை உருவாக்குகிறது.இதனால் தோல்வி அபாயமும் குறைக்கப்படுகிறது. தற்போது, ஒரே ஒரு இயந்திரம் உலு பாண்டன் MRT பணிமனையில் செயல்பட்டு வருகிறது.

SMRT எதிர்காலத்தில் வடக்கு–தெற்கு மற்றும் கிழக்கு–மேற்கு பாதைகளில் ஆன்-சைட் வெல்டிங் செயல்பாடுகளை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குவான் ஜுன்வெய் கூறியதாவது, “மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களில் முதலீடு செய்வதன் மூலம் பயணிகளுக்கு மென்மையான மற்றும் நம்பகமான ரயில் பயணத்தை உறுதி செய்ய முடியும்” என்று கூறினார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK