காதலியின் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 82 வயது முதியவர்…!! என்ன நடந்தது..?
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 82 வயதான லோ சுன் மெங் என்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, 30 ஆண்டுகளுக்கு முன் (1995ல்) காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் தனது காதலியின் காரை மருத்துவரை பார்க்கச் செல்லும்போது ஓட்டியதில் ஏற்பட்ட விபத்துக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவருக்கு புதன்கிழமை (22.10.25) சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
அக்டோபர் 30, 2023 அன்று,லோ சுன் மெங் அங் மோ கியோவில் உள்ள தனது 57 வயது காதலியின் வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் காலையில் எழுந்ததும், அவருக்கு முழங்கால்களில் வலி ஏற்பட்டது.எனவே அவர் வலி நிவாரணி ஊசி போடுவதற்காக டவுனர் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருத்துவரைப் பார்க்க முடிவு செய்தார்.
மருத்துவரைப் பார்த்த பிறகு, பிரதிவாதி காலை உணவை வாங்க பிஷானுக்கு காரில் சென்றார். ஒரு கார் பார்க்கிங் வழியாக வாகனம் ஓட்டும்போது,பிரேக்கிற்குப் பதிலாக ஆக்ஸிலரேட்டரை தவறுதலாக மிதித்ததால், கார் கடைக்குப் பின்புறம் இருந்த எரிவாயு சிலிண்டர் அலமாரியில் மோதியது.இதனால் கார் மற்றும் கடைச் சொத்துகள் சேதமடைந்தன.
இதனால் கடையின் உரிமையாளர் காவல்துறைக்கு புகார் அளித்ததால் இந்த வழக்கு வெளிப்பட்டது.
இராணுவ அதிகாரியாக பணியாற்றிய சுன் மெங் மெங்,மனைவியை இழந்த பின் ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக தான் இந்த தவறு நிகழ்ந்ததாக அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
உரிமம், காப்பீடு இன்றி வாகனம் ஓட்டியதற்கும், கவனக்குறைவால் விபத்து ஏற்படுத்தியதற்கும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், நீதிமன்றம் அவருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை, S$ 2,000 அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதித்தது.