சாங்கி விமான நிலையத்தின் புதிய 5-ஆம் முனையம்!! எப்போது திறக்கப்படும்!!

சாங்கி விமான நிலையத்தின் புதிய 5-ஆம் முனையம்!! எப்போது திறக்கப்படும்!!

சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தின் புதிய 5 ஆம் முனையத்தின் முதற்கட்டம் 2030 ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது திறக்கப்பட்டதும் SIA,SCOOT விமான நிறுவனங்கள் அங்கிருந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முனையம் 5 இல் பேருந்து,டாக்ஸி உள்ளிட்ட மற்ற போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.

இந்த புதிய முனையம் சுமார் 50 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.

முனையம் 5 பற்றிய தகவல் முதல்முறையாக 2013 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.அந்த திட்டம் கொரனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டது.

தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட், Cross Island பாதைகளை முனையம் 5 வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது 5 ஆம் முனையத்தை சிங்கப்பூரின் நகர மையம் மற்றும் முக்கிய நடுவங்களுடன் இணைக்க உதவும்.