குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை…!!

குழந்தை மானபங்க வழக்கு: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சிறைத் தண்டனை...!!

சிங்கப்பூர் : குழந்தை மானபங்க வழக்கில் 62 வயதான பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மழலையார் பள்ளியின் குழந்தைகளை, சமையல்காரர் மானபங்கம் செய்ததை மறைத்த குற்றத்திற்காக இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியருக்காக வாதாடிய வழக்கறிஞர் அவருக்கு அபராதம் விதிக்கும்படி கேட்டுக் கொண்ட போதிலும், அதனை மறுத்த நீதிபதி இந்த சிறைத்தண்டனையை அளித்துள்ளார்.

தலைமையாசிரியருக்கு வழங்கும்போது, குழந்தைகளை எப்படி துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பது போன்ற பயிற்சிகளுக்கு அவர் சென்றிருந்த போதிலும், இந்த சம்பவத்தை பற்றி புகார் செய்யாமல் இருந்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மானபங்கம் செய்த 61 வயது சமையல்காரர் தியா குவான் ஹூவாட்டிற்கு சென்ற ஆண்டு (2025) நவம்பர் மாதத்தில் சுமார் 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மானபங்க சம்பவம் ஆனது 2023 இல் நடந்தது. அவர் குழந்தைகளிடம் நடந்து கொண்ட செயல் பள்ளியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது.

 

கண்காணிப்புக் கேமராவில் பதிவு ஆகியிருந்த காணொளிகளை அளித்த குற்றத்திற்காக, முன் துணை தலைமை ஆசிரியருக்கும், முன்னாள் நிர்வாக இயக்குநருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK