சிட்டி ஸ்கொயர் மால் விபத்து...!!! இன்று வழக்க நிலைக்கு திரும்பிய கடைகள்..!!!
சிங்கப்பூர்: சிட்டி ஸ்கொயர் மாலில் நேற்று (03.09.25) தண்ணீர் குழாய் வெடித்து, கே.எஃப்.சி துரித உணவகத்தின் கூரை இடிந்து விழுந்த சம்பவம் நடைபெற்றது.
இச் சம்பவத்திற்கு பிறகு இன்று(04.09.25) காலை முதல் நிலத்தடி தளத்தின் பெரும்பாலான கடைகள் மற்றும் B2 தளத்தின் அனைத்து கடைகளும் மீண்டும் வழக்கம்போல திறக்கப்பட்டன.
சிட்டி பிளாசா மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்ததாவது, சம்பவம் நடந்தவுடன் பாதுகாப்புக் குழுவினர் மக்களை அப்புறப்படுத்தினர். துப்புரவு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதி சுத்தம் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
சம்பவத்தின் காரணம் உடைந்த தண்ணீர் குழாயாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வண்டல் வெளியேறி, தண்ணீர் பழுப்பு நிறமாக மாறியது. சம்பந்தப்பட்ட தண்ணீர் பம்ப் உடனடியாக நிறுத்தப்பட்டது.
“பாதிக்கப்பட்ட இரண்டு கடைகளின் பழுதுபார்ப்புக்கு தீவிரமாக உதவி செய்து வருகிறோம். அவை விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாடகையாளர்களின் வணிக பாதிப்பு குறைக்கப்படும்” என மக்கள் தொடர்பு அதிகாரி குறிப்பிட்டார்.