இரங்கல்..!!உலகை விட்டு மறைந்தார் ராணி சிரிகிட்..!!

இரங்கல்..!!உலகை விட்டு மறைந்தார் ராணி சிரிகிட்..!!

தாய்லாந்து ராணி சிரிகிட் மரணத்திற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னுக்கு எழுதிய கடிதத்தில், தானும் மனைவி ஜேனட் ஃபுஜிகியும் ராணியின் மறைவால் வருந்தியதாக தெரிவித்தார். அவர் வாழ்கை அசாதாரணமானது, பாரம்பரிய கைவினை பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு மேம்பாடு ஆகியவற்றில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தியவர் என்றும் அவர் கூறினார்.

மலேசிய பிரதமர் லாரன்ஸ் வோங் தாய்லாந்து பிரதமர் அனுட்டிக்கு எழுதிய கடிதத்தில், ராணியின் சிறந்த பங்களிப்புகள் தாய்லாந்து மக்களுக்கு நீண்டகால பயனளிக்கும் என்றும், அவரது மறைவு பெரிய இழப்பாகும் என்றும் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் செரிக்கு எழுதிய கடிதத்தில், ராணியின் அன்பு தாராள மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பு என்றும் நினைவில் இருக்கும் என்று தெரிவித்தார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan