கவனக்குறைவால் நேர்ந்த உயிரிழப்பு..!! என்ன காரணம்..??
சிங்கப்பூரில் ராஃபிள்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 54 வயது மருத்துவர் ஃபோங் யான் கிட் அவர்கள் 63 வயதான பெண்ணிற்கு செய்த அறுவை சிகிச்சையின் போது கவன குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பெண்ணினுடைய சிறுநீரகத்திற்கு செல்லும் நரம்பிற்கு பதிலாக குடல் இருக்கும் வயிற்றுக்கும் செல்லும் ரத்த நாளங்களை வெட்டியதால் பெண்ணின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் உறுப்புகளுக்கு ரத்த சுழற்சி இல்லாமல் ஆனது.
இதன் விளைவாக 2022 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழந்தார்.
சிறுநீரகத்தில் இருக்கும் கட்டியை அகற்றுவதற்கே உயிரிழந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக நவம்பர் மாத விசாரணையின் போது தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் அறுவை சிகிச்சையின் போது தவறு செய்ததை உணர்ந்த மருத்துவர், சுமார் 13 நிமிடங்களுக்கு அறுவை சிகிச்சையை நிறுத்தியதும் அல்லாது உதவிக்காக யாரையும் அழைக்கவும் இல்லை.
இது குறித்த வழக்கானது நேற்று(மார்ச் 12) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, வழக்காடல் நடத்தப்பட்டது.
சரியாக ரத்தநாளங்கள் வெட்டப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்காமலே டாக்டர் ஃபோங் அறுவை சிகிச்சையை முடித்து விட்டதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.
இந்த விவரம், சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தின் நிபுணர் அறிக்கையின் மூலம் நீதிமன்றத்தில் தெரியவந்தது. மேலும் அறுவை சிகிச்சை காரணமாகவே அந்தப் பெண் உயிரிழந்தார் என்பதை அரசாங்க மரண விசாரணை அதிகாரியான எடம் நக்கோடா கூறியிருந்தார்.
தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக ஏற்பட்ட இந்த மரணத்தின் குற்றத்திற்காக, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.