சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் சிங்கப்பூருக்கு இஎம்ஐ(EMI) ஆப்ஷனில் செல்ல ஒரு வழி ஸ்டுடென்ட் பாஸ் (STUDENT PASS) மட்டும் தான்.
சிங்கப்பூரில் உயர் கல்வி பயில வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. ஆனால், அங்கு செல்வதற்கு முன்பு நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான உண்மைகளும், விதிகளும் உள்ளன. அவற்றை முறையாகப் புரிந்து கொள்ளாமல் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
நீங்கள் சிங்கப்பூருக்கு படிக்கச் செல்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 4 முக்கிய புள்ளிகள் மற்றும் சுலபமாக விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ.
1. நீங்கள் கவனிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்: படிப்பு மட்டுமே நோக்கம்: நீங்கள் சிங்கப்பூருக்குச் சென்றால், உங்களது முதன்மை நோக்கம் படிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.
வேலை செய்யும் நோக்கம் கூடாது: ஸ்டூடென்ட் பாஸ் (Student Pass) மூலம் சிங்கப்பூருக்குள் நுழைந்துவிட்டு, அங்கு பகுதிநேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ வேலை செய்யலாம் என்ற நோக்கத்தோடு செல்லக் கூடாது.
OJT (On-the-Job Training) வாய்ப்புகள் குறைவு: தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூரில் OJT (ஆன்-தி-ஜாப் டிரெய்னிங்) கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே, 100% வேலைப்பயிற்சி (OjT) கிடைத்துவிடும் என்று நம்பி ஏமாற வேண்டாம்.
2. இடைத்தரகர்கள் (Brokers/Agents) இன்றி எப்படி விண்ணப்பிப்பது? சிங்கப்பூர் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க எந்தவொரு இடைத்தரகரையோ அல்லது ஏஜென்ட்டையோ அணுக வேண்டிய அவசியம் இல்லை.
நேரடித் தொடர்பு: நீங்கள் படிக்க விரும்பும் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, நேரடியாக அவர்களுக்கு மின்னஞ்சல் (Email) மூலம் தொடர்பு கொள்ளலாம்.
ஆஃபர் லெட்டர் (Offer Letter): உங்களிடம் சரியான கல்வித் தகுதிகள் இருந்தால், கல்லூரியே உங்களுக்கு ‘ஆஃபர் லெட்டர்’ அனுப்பி வைக்கும்.
ICA அனுமதி: அந்த ஆஃபர் லெட்டரை வைத்து, சிங்கப்பூரின் ICA (Immigration and Checkpoints Authority) இணையதளத்தில் மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்து அப்ரூவல் பெற்றுக் கொள்ளலாம்.
3. கட்டண சலுகை (EMI / Installment Option): சிங்கப்பூரில் படிப்பதற்கான மொத்தக் கட்டணத்தையும் நீங்கள் இந்தியாவிலேயே ஒரே தவணையாகக் கட்டிவிட்டுச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அங்கு படிப்பதற்கான கட்டணங்களை நீங்கள் மாதாந்திரத் தவணை (Installment) முறையிலும் செலுத்திக் கொள்ளும் வசதிகள் உள்ளன.