பரபரப்பு…!!சிங்கப்பூர் அங் மோ கியோவில் விபத்து..!!!

பரபரப்பு...!!சிங்கப்பூர் அங் மோ கியோவில் விபத்து..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று (05.09.25) பிற்பகல் அங் மோ கியோ அவென்யூ 10, பிளாக் 409 அருகே நடந்த சாலை விபத்தில் 11 வயது சிறுவன் தீவிர காயமடைந்தான்.

போலீசார் தெரிவித்ததாவது, மதியம் 3:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், அதில் ஒரு காரும் ஒரு பாதசாரியும் மோதியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 11 வயது சிறுவன் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.

சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் அவசர உதவி வழங்கி சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் உறுதி செய்துள்ளனர்.

இந்த விபத்தில் தொடர்புடைய 71 வயது ஆண் ஓட்டுநர் விசாரணைக்காக போலீசாரிடம் ஒத்துழைத்துவருகிறார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan