தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூரின் மருத்துவமனை..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 76 வது தேசிய நினைவு சின்னமாக அரசு இதழில் ஒரு மருத்துவமனை இணைக்கப்பட உள்ளது.
ஹெம் ஷாயர் சாலையில் உள்ள முன்னாள் கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையின் மூன்று பிளாக்குகள் தேசிய நினைவுச் சின்னமாக சேர்க்கப்பட உள்ளது.
இதனை முன்மொழிந்தது தேசிய மரபுடைமை கழகம் ஆகும். (செப்டம்பர்) 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று Roots.gov.sg என்ற மரபுடைமை வள இணையத்தளத்தில் முன்மொழிக்கப்பட்டது.
மருத்துவமனையில் உள்ள மூன்று பிளாக்குகளும் 1930 களிலும் 1950 களிலும் கட்டப்பட்டவை ஆகும். இந்த பிளாக்குகள் மூலம் சிங்கப்பூரில் பேறுகால பராமரிப்பு எப்படி வளர்ந்துள்ளது என்பதை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது என தேசிய மரபுடைமை கழகம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய நினைவுச் சின்னமாக முன்மொழியப்பட்டுள்ள இந்த மூன்று பிளாக்குகள் நிலப் போக்குவரத்து ஆணையம் குத்தகைக்கு எடுத்து தனது அலுவலகமாக பயன்படுத்த உள்ளது.
பழைய கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையானது 1997 ஆம் ஆண்டு 100 புக்கிட் தீமா சாலையில் உள்ள வளாகத்திற்கு மாற்றியமைத்த போது கே கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை என்று அழைக்கப்பட்டது.
பேறு காலம் நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு நோயாளிகளுக்கு 1868இல் சிகிச்சை அளித்த கெர்பாவ் மருத்துவமனை 1924 அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து இலவச மகப்பேறு மருத்துவமனையாக அதிகாரப்பூர்வமாக மாறியது.
மாறிய நாளிலிருந்து மகப்பேறு சுகாதார பராமரிப்பில் மருத்துவமனையின் நிபுணத்துவமானது தொடங்கி உள்ளது என்று தேசிய மரபுடைமை கழகம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய நினைவு சின்னங்களாக முன்மொழியப்பட்ட மருத்துவமனையின் மூன்று பிளாக்குகளுக்கும் ஏற்கனவே நினைவுச் சின்னங்களில் உள்ள இடங்களுக்கு கொடுக்கப்படும் அதே பழமை பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். இவற்றை மீறுவோருக்கு தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.