இன்று (செப்டம்பர்) 6-ஆம் தேதி தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு கடற்கரையில் 57 வயதான ஆஸ்திரேலியா நபர் ஒருவர் சிட்னியில் உள்ள லாங் ரீஃப் மற்றும் டீ வை அருகே உள்ள கடற்கரைகளுக்கு வெளியே பசிபிக் பெருங்கடலில் பல நண்பர்களுடன் சர்ஃபிங் சென்றுள்ளார்.
திடீரென கடலில் ஒரு சுறாவால் அந்த நபர் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட சில நேரங்கள் சென்று அவரது உடலானது கடலில் மிதந்து கொண்டிருந்தது. இந்த தகவலை நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்தனர்.
அதிகப்படியான ரத்தம் வெளியேறிய காரணத்தினாலும் மீட்க முடியாத காரணத்தினாலும் அந்த நபர் இறுதியில் இறந்துள்ளார்.
இந்தச் செய்தி ஏஜென்ட் பிரான்ஸ் பிரஸ் வெளியிட்டுள்ளது.
விபத்திற்குப் பிறகு அங்கு கடற்கரைகள் மூடப்பட்டன மேலும் அருகில் உள்ள கிளப்புகளும் இந்த வார இறுதிவரை அங்கு யாரும் செல்லக்கூடாது எனவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிட்னியில் இறுதியாக ஏற்பட்ட சுரா தாக்குதல் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்தது. அந்த சம்பவத்தில் போது இறந்த நபர் 35 வயதை சேர்ந்த பிரிட்டிஷ் டைவிங் பயிற்றுவிப்பாளர் லிட்டில் பே ஆவார்.