செம்பவாங்கில் ஏற்பட்ட தீ விபத்து..!!

செம்பவாங்கில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூர்: செம்பவாங் க்ரசென்டில் உள்ள பிளாக் 362 ஏ யின் மூன்றாவது தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் நேற்று (21/11/2025) திடீரென தீ பற்றியது.

இந்த தகவல் ஆனது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு காலை 8:15 மணிக்கு தெரியவந்தது.

தீயணைப்பு மீட்பு பணியினர் தீ பற்றிய இடத்திற்கு சென்றபோது படுக்கையறையில் தீ பற்றியதைக் கண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து உடனேயே நெருப்பை அணைத்துள்ளனர்.

தீ பற்றிய போது வெளிவந்த புகையை சுவாசித்த இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாக்கில் இருந்த சுமார் 50 குடியிருப்பாளர்களை குடிமை தற்காப்பு படையினர் வெளியேற்றியுள்ளனர்.

தீ பற்றிய காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று சென்ற ஆண்டு(2024) வீடுகளில் தீப்பிடித்த சம்பவங்களின் எண்ணிக்கையானது 968 ஆக இருந்தது.

பெரும்பாலும் தீப்பற்றுவதற்கு காரணமாக சமையல் செய்யும்போது கவனக்குறைவாக உள்ளதும் மின்கம்பி கோளாறுகளால் ஏற்படும் தவறுகளும் முக்கிய காரணங்களாக உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK