சைனா டவுனில் நடந்த பயங்கர விபத்து..!! சிறுமி உயிர் இழந்த சம்பவம்..!!

சைனா டவுனில் நடந்த பயங்கர விபத்து..!! சிறுமி உயிர் இழந்த சம்பவம்..!!

சைனா டவுனில் ஆறு வயது சிறுமி மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக 38 வயது பெண் ஓட்டுனர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே ஆறு வயது சிறுமி உயிர் இழந்த கோரமான கார் விபத்து பெரியவந்துள்ளது.

மரணத்தை ஏற்படுத்தியதாக தெரியப்படும் கவன குறைவான ஓட்டுதல் மற்றும் படுகாயத்தை விளைவிக்கும் ஆகிய இரண்டு குற்றங்களுக்காக இன்று (ஏப்ரல் 8) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களுடைய வழக்கறிஞர்களுடன் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இன்று (ஏப்ரல் 8) காலை சுமார் 8:25 மணியளவில் மாநில நீதிமன்றங்களுக்கு வந்து சேர்ந்தனர்.

பிரதிவாதியின் ஆறு வயது மகன் இந்த கார் விபத்திற்கு சாட்சியாக உள்ளான். பிரதிவாதியின் வழக்கறிஞர் பிரதிவாதியின் உடைய ஆறு வயது மகன் கார் விபத்திற்கு சாட்சியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் பிரதிவாதியின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படக் கூடாது எனவும் வாதிட்டார்.

மேலும் பிரதிவாதியின் உடைய அடையாளத்தை வெளிப்படுத்தக் கோரி ஒரு தடை உத்தரவுக்கு விண்ணப்பித்திருந்தால் இந்த விண்ணப்பத்திற்கு அரசு தரப்பு எந்த ஒரு எதிர் கருத்தும் தெரிவிக்கவில்லை.

நீதிபதி இறுதியாக அந்த மனுவை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் ஒரு தடை உத்தரவை பிறப்பித்து இருந்தார். அதன்படி பிரதிவாதியின் பெயர் மற்றும் விபத்து சம்பந்தப்பட்ட வாகனத்தினுடைய பதிவு எண் உட்பட பிரதிவாதியின் மகனின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய எந்த ஒரு தகவலையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள புத்த பல் புனித கோயிலுக்கு அருகே உள்ள திறந்தவெளி வாகனம் நிறுத்தம் இடத்தில், பிப்ரவரி 6 நண்பர்கள் நேரத்தில் ஒரு கோரமான கார் விபத்து நிகழ்ந்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த விபத்தில் ஆறு வயதை சேர்ந்த ஷெய்னா என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே நேரத்தில் அவரது 31 வயது தாயார் ரைஷா அனிந்திரா பாஸ்கசிஸ்வி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த அறிக்கையை காவல்துறை (ஏப்ரல் 7) அன்று வெளியிட்டது. பிறரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு கவனக்குறைவான வாகனம் ஓட்டுதலையும் அதிகாரிகள் எப்போதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து ஓட்டுனர்களும் போக்குவரத்து விதைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சாலைப்போக்குவரத்து சட்டத்தின் கீழ் கவன குறைவான ஓட்டுதலால் மரணம் ஏற்படுத்துவது போன்ற குற்றத்திற்கு அதிகபட்சமாக $10,000 வரேன் அபராதம் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் மற்றும் அனைத்து நிலை ஓட்டுனர் உரிமங்களையும் இடைநீக்கம் செய்தல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும்.

கவனக்குறைவான ஓட்டுகளால் கடுமையான காயத்தை ஏற்படுத்தினால் அதிகபட்சமாக $5,000 அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தன்மையும் அல்லது இரண்டும் மற்றும் அனைத்து நிலை ஓட்டுனர் உரிமங்களையும் இடைநீக்கம் செய்தல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்டவர் அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டாரா என்பது குறித்த கேள்விகளுக்கு தகவல் தெரியவில்லை.


இறுதியாக இந்த வழக்கு குறித்த நீதிபதி கூறிய கருத்து:
வழக்கு விசாரணைக்கும் முந்தைய கலந்தாய்விற்காக மே 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு $25,000 பிணைத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK