நீங்கள் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று எப்படி வேலை தேடுவது?

இந்தப் பதிவை முழுமையாக நீங்கள் படித்து முடிக்கும் பொழுது நீங்கள் நிச்சயமாக சிங்கப்பூரில் எப்படி வேலை தேடுவது என்பதை தெரிந்து கொள்வீர்கள். எனவே இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
நமது Sgtamilan பக்கத்தில் பலரும் கேட்கும் கேள்வி சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை தேடலாமா? அப்படி வேலை தேடுவது என்றால் எப்படி வேலை தேடுவது?
இதற்கான பதில் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சிங்கப்பூரை பொறுத்தவரை அங்கே வேலை கிடைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை சொர்க்கமாக மாறிவிடும். ஏனென்றால், அது ஒரு பாதுகாப்பான நகரம் மட்டுமில்லாமல் நல்ல சம்பளம், நல்ல வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் பணிபுரியலாம்.
இதற்காக பலரும் வேலைக்காக முயற்சி செய்து கொண்டு உள்ளனர். அப்பொழுது ஒரு சிலர் சிங்கப்பூரில் டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை தேடலாம் என்று முயற்சி செய்கின்றனர்.
ஒரு சிலர் அதேபோல் டூரிஸ்ட் விசாவில் சென்று வேலையும் தேடுகிறார்கள். ஆனால் சிங்கப்பூரின் சட்ட திட்டத்தின்படி டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை தேடக்கூடாது. நீங்கள் எந்த வேலைக்காக சிங்கப்பூருக்கு செல்கிறீர்களோ? அதை மட்டுமே செய்ய வேண்டும்.
டூரிஸ்ட் விசா என்பது சிங்கப்பூரை சுற்றி பார்ப்பதற்கான ஒரு விசாவாகும். அதில் சென்று வேலை தேடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.
சிங்கப்பூர் இமிகிரேஷனுக்குள் நீங்கள் செல்லும் பொழுது நீங்கள் வேலை தேடத்தான் வந்திருக்கிறீர்கள் என்று அவர்களுக்கு தெரிந்தால் நிச்சயமாக உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள். சிங்கப்பூருக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் ஒரு சிலர் பொய் சொல்லி விட்டு அங்கே சுற்றுலா விசாவில் சென்று வேலை தேடுகின்றனர். அதில் ஒரு சிலருக்கு வேலையும் கிடைக்கிறது. ஆனால் பலருக்கு மிஞ்சுவது ஏமாற்றமும் செலவு செய்த பணத்தின் நட்டம் மட்டுமே.
பிறகு எப்படி தான் நான் சிங்கப்பூரில் வேலை தேடுவது? என்று கேட்பது எனக்கு புரிகிறது. நீங்கள் சிங்கப்பூர் செல்லாமலேயே இங்கிருந்து சிங்கப்பூரில் அனுமதி பெற்ற வேலை வாய்ப்பு அப்ளிகேஷன்கள் மூலமும் வெப்சைட் மூலமும் நீங்கள் வேலை தேடலாம்.
தமிழ்நாட்டில் அரசு அனுமதி பெற்ற ஏஜெண்டுகள் மூலமும் நீங்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் இந்த ஏஜெண்டுகள் உங்களிடம் இருந்து பணம் வாங்குவார்கள்.
நீங்கள் நேரடியாக கம்பெனியை தொடர்பு கொண்டு போனீர்கள் என்றால் பணம் கட்டாமல் வேலைக்கு செல்ல முடியும். ஆனால் நீங்கள் நிச்சயமாக சிங்கப்பூரில் பதிவு செய்த வேலை வாய்ப்பு வெப்சைட்டுகளை மட்டுமே நம்ப வேண்டும். அவர்கள் பணம் எதுவும் கேட்க மாட்டார்கள், உங்களிடம் பணம் கேட்டால் கண்டிப்பாக அவர்கள் ஏமாற்று பேர் வழியாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
பணம் கட்டி செல்லவும் தயாராக இருப்பவர்கள் நமது Sgtamilan இணைய பக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு அனுமதி பெற்ற ஏஜெண்டுகள் மூலம் வரும் வேலை வாய்ப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் உங்களுக்காக கொடுத்துக் கொண்டு வருகிறோம். இதைப் பின் தொடர்ந்து பலர் நல்லபடியாக சிங்கப்பூர் சென்றுள்ளனர். நீங்களும் தொடர்ச்சியாக நமது பதிவை பார்க்கும் பொழுது நல்ல வேலை கிடைத்து சிங்கப்பூர் செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது இணையதளமான www.sgtamilan.com என்ற பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
