லீ சியன் லூங் நடத்திய முக்கிய பேச்சுவார்த்தை..!!அர்ஜென்டினாவில் நடந்தது என்ன..?

லீ சியன் லூங் நடத்திய முக்கிய பேச்சுவார்த்தை..!!அர்ஜென்டினாவில் நடந்தது என்ன..?

சிங்கப்பூர்:அர்ஜென்டினாவுக்கு பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

குறிப்பாக, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, மேலும் இரு நாடாளுமன்றங்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு, சிங்கப்பூரும் அர்ஜென்டினாவும் தங்களது இராஜதந்திர உறவுகளின் 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடின. இதை முன்னிட்டு இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மூத்த அமைச்சர் லீ, நேற்று (20.10.25) அர்ஜென்டினா காங்கிரசில் பல முக்கிய அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், இரு தரப்பினரும் நீண்டநாள் நட்புறவை வரவேற்றதாகவும் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சகம் (MCI) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan