சீன புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய இந்தியர்களும் சீனர்களும்..!!

சீன புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய இந்தியர்களும் சீனர்களும்..!!

சிங்கப்பூரில் சீன புத்தாண்டு நேற்று (பிப்ரவரி 17) முதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீன புத்தாண்டை இந்தியர்களும் சீனர்களும் இணைந்து பக்தியுடனும் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளனர்.

நேற்று காலை லோயாங் துவா பெக் கொங் என்ற ஆலயத்தில் பல பக்தர்கள் வழிபடுவதற்கு திரண்டனர். அங்கு தாவோயிஸ்ட் தெய்வங்களுக்கும் இந்து தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன.

இந்தியர்களும் சீனர்களும் விநாயகர் சன்னதியில் வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு உணவுகளும் சிவப்பு உரைகளும் வழங்கப்பட்டன. இதனை பெறுவதற்காக பல மக்களும் வரிசையில் காத்திருந்து பிறகு வாங்கிச் சென்றனர்.

யிஷினில் இருக்கின்ற ஸ்ரீ வீரமுத்த முனீஸ்வரன் கோவிலிலும் புத்தாண்டிற்காக வழிபட பல மக்கள் சென்றுள்ளனர் இந்த கோவில் ஹொக் ஹீவாட் ஹெங் ஆலயம் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் இந்துக்களும் தாவோயிஸ்ட் மக்களும் காலம் காலமாக இணைந்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது.

நேற்று சில மக்கள் முனீஸ்வரன் சன்னதியில் ஆரஞ்சு பழங்களை படைத்து அதனுடன் ஊதுபத்தி ஏற்றி வழிபட்டனர் பொதுவாக இந்த கோவிலானது நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் ஆனால் நேற்று சீன பக்தர்களை வரவேற்பதற்காக இந்த கோவிலானது கூடுதல் நேரம் திறந்து மக்கள் வழிபடுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK