சிங்கப்பூரில் ஜப்பானிய பயணி அதிரடியாக கைது..!!

சிங்கப்பூரில் ஜப்பானிய பயணி அதிரடியாக கைது..!!

சிங்கப்பூரில் கடந்த மாதம் 30ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் முதல் முனையில் ஜப்பானிய பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் அதிகாரிகள் பைகளை சோதிப்பதற்கு முன்பாக ஜப்பானிய பயணியிடம் சந்தேகப்படும்படியாக பொருள்கள் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பிள்ளனர்.

ஆனால் அந்த பயணி அப்படி எந்த பொருளும் இல்லை என்று கூறியுள்ளார்.

அதிகாரிகள் அவர் பைகளை சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக கிட்டத்தட்ட 850 புகையிலை பொருள்களும் ஒரு மின் சிகரெட்டுகளும் இருந்துள்ளது.

உடனேயே ஜப்பானிய ஆடவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பவத்தின் குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் ஆடவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த சம்பவத்தை சிங்கப்பூர் குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் ஆனது சமூக வலைதளமான facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK