சிங்கப்பூரில் ஊழல் குற்றங்கள் தொடர்பான ரகசியத் தகவல் கசிவு..!!!

சிங்கப்பூரில் ஊழல் குற்றங்கள் தொடர்பான ரகசியத் தகவல் கசிவு..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாதுகாப்பு நிறுவனமான செர்டிஸ் நிறுவனத்தில் உள்ள 4 ஊழியர்கள் ஊழல் குற்றங்கள் தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருந்ததை பலமுறை வெளியிட்டனர்.

இச்சம்பவம் குறித்து, CPIB மற்றும் சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்த தகவலானது,
ஜூன் 2021 மற்றும் மார்ச் 2023 ஆம் ஆண்டிற்கிடையில், சுகைமி கைருள் மற்றும் அசிஃபியிடமிருந்து ஜூரோங் துறைமுகத்தில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவது குறித்து தகவல்களைப் பலமுறை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த ஆண்டில் (ஜூன் 2021 மற்றும் மார்ச் 2023) சுகைமி மீது அமலாக்கத் துறையினர் நடவடிக்கை எடுத்ததற்காகக் பலமுறை அதிகாரிகளுக்கு மொத்தம் S$7,661 (US$5,900) பணம் கொடுத்ததாகவும் அதிகாரிகள் செய்திக் குறிப்பில் தெரிவித்தனர்.

மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2024 இல் ஜூரோங் துறைமுகம் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடியில் அமலாக்க சோதனைகள் குறித்து முறையே ஹாசிக் மற்றும் டானியாவிடமிருந்து சுகைமி தகவல்களைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டிலும் (மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2024) சுகைமி டானியாவுக்கு S$2.190 கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சுகைமியின் வீட்டை சோதனை செய்த போது, 22 அட்டைப் பெட்டிகள் மற்றும் 470 பாக்கெட் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கு சுகைமி மற்றொரு நபருடன் இணைந்து பணியாற்றிய தகவல் தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், சுகைமி மீது ஆறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஊழல் குற்றத்திற்காக மேலும் 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஶ்ரீ டேனியா அப்துல் ரசாக்(26), முஹம்மது ஹாசிக் கருடின்(33), முஹம்மது கைருள் அமீர் சுகைமி(25), மொஹமட் அசிஃபி செலமத்(32) ஆவர். சிங்கப்பூர் நபரான முகமது சுகைமி கசாலியும் ஆவார்.

இந்த 5 நபரின் மீதும் இன்று (ஆகஸ்ட் 8 ஆம் தேதி) ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம்(OSA) ஆகியவற்றின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு தலா S$2,000 வரை அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகாரப்பிரிவு சட்டப் பிரிவு 5 – இன் கீழ் வழங்கப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan