தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..?

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..?

தாய்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த சூதாட்ட கூடத்தில் இரண்டு சிங்கங்களும் மூன்று ஆசிய கருங்குரடிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன.

இதை டிராட்(Trat) மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடற்படை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக தேசிய பூங்கா, வனவிலங்கு தாவர பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

டிசம்பர் 25, 2025 கிறிஸ்துமஸ் நாள்  அன்று அதிகாலையில் இரண்டு சிங்கங்களும் ரட்சாபுரி(Ratchaburi) மாநில வனவிலங்கு சரணாலயத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

பெண் சிங்கத்திற்கு மேரி (Merry) என்றும் ஆண் சிங்கத்திற்கு கிறிஸ்துமஸ் (Christmas) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மூன்று ஆசிய கருங்குராடிகளும் பாங் லமுங்(Bang Lamung) வனவிலங்கு இனப்பெருக்க நிலையத்திற்கு பாதுகாப்பாக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

திடீரென இடமாற்றம் செய்ததால் சிங்கங்கள் சோர்வடைந்துள்ளனர். எனவே உடல் நலத்தை பரிசோதிப்பதற்கு தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதே வேளையில் சுற்றுப்புறத்தோடு அவை ஒன்றி போவதற்கு உரிய உதவிகளும் செய்யப்படும் என சரணாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK