அதிர்ச்சி..!!செராங்கூன் பகுதியில் லாரி விபத்து..!!

அதிர்ச்சி..!!செராங்கூன் பகுதியில் லாரி விபத்து..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று (25.09.25) காலை செங்காங்கின் ரிவர்வேல் கிரசென்ட் பகுதியில் ஒரு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஒருவர் காயமடைந்தார்.

செங்காங் ரிவர்வேல் மாலுக்கு வெளியே இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

போக்குவரத்து சிக்னலுக்கு முன்னால் ஒரு லாரி பக்கவாட்டில் கவிழ்ந்து விழுந்ததை ஆன்லைனில் பரவி வரும் காணொளிகள் காட்டுகின்றன.

ஒரு போலீஸ் காரும் ஒரு போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிளும் சம்பவ இடத்திற்கு வந்து உதவி செய்தன.

சிவில் பாதுகாப்பு படை இன்று(25.09.25)காலை சுமார் 5:20 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிறிய காயங்களுடன் இருந்த ஒருவரை மீட்டனர்.

ஆனால் அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK