சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் டிரைவ் 12 நோக்கிச் சென்ற தெம்பனிஸ் அவன் யூ 10-இல் செப்டம்பர் (4 ஆம் தேதி) மாலை 6:00 மணி அளவில் ஐந்து கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் முதல் பாதையில் ஒரு வெள்ளை நிற கார் சென்றிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த சிவப்பு கார் மீது மோதியது.
இதனை அடுத்து, அடுத்தடுத்த கார்களின் மீது கடந்த ஐந்து கார்கள் மீது மோதியது ஒரு சங்கிலி தொடர் போன்ற விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் தகவலானது (செப்டம்பர்) 4ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில் கிடைத்தது.
இந்த விபத்தில் சிக்கியவர்கள் 60 வயது பெண் ஓட்டுநர், 32 வயது ஆண் ஓட்டுனர், 40 வயது ஆண் ஓட்டுனர் மற்றும் 6 மற்றும் 9 வயதுடைய அவர்களது இரண்டு குழந்தைகள் ஆவர்.
விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காவல்துறை விசாரணை என்பது 60 வயதைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் விபத்து காரணங்களை தெரிவித்தார்.
நோயாளிகளில் 3 பேரை சாங்கி மருத்துவமனையிலும், மற்ற இருவரை கே கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படை தகவலை தெரிவித்துள்ளது.
விபத்து காணொளியானது SG Road Vigilante இன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.