சிங்கப்பூர்: ஜாலான் பெசார் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் மாதம்) 18ஆம் தேதி முதல் NTUC இன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை பயிற்சி மையமான e2i – யில் தொழில் சேவைகள் மற்றும் கூட்டணி குழுவின் பங்குதாரர் மேலாண்மை இயக்குனராக இணைவார் எனவும், மேலும் தொழிற் கட்சி எம்பி ஆகவும் மாறுவார் என்றும் NTUC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜாலான் பெசார் ஜி.ஆர்.சி நாடாளுமன்ற உறுப்பினர் பூன் லீ கா, தொழிலாளர் இயக்க நாடாளுமன்ற உறுப்பினராக தேசிய தொழிற்சங்க காங்கிரஸில் இணைவார்.
டாக்டர் ரிசால் ஊழியர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார் குறைந்த வருமான ஊழியர்களுக்கு கை கொடுப்பார். மலாய் – முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பை வலுப்படுத்துவது கவனம் செலுத்துவார்.
NTUC, அதன் e2i ஆகியவற்றுடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். வயது ஊதியம் பின்னணி ஆகையால் பின்தங்கியுள்ள ஊழியர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையே வலுவான பாலமாக இருக்கவும் விரும்புகிறேன் என்றார் டாக்டர் ரிஸால்.
ஜூன் 30 அன்று NTUC இல் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் NTUC நாடாளுமன்ற உறுப்பினர் ஃபஹ்மிக்கும் NTUC நன்றி தெரிவித்துள்ளது