சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் மெட்ரோ (MRT) வழித்தடங்கள் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஹரி ராயா மற்றும் வெசாக் தினத்தை முன்னிட்டு பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள பல MRT வழித்தடங்கள் இந்த முடிவுகளை எடுத்துள்ளன.
இந்த நீட்டிக்கப்பட்ட MRT சேவைகளுடன் இணைந்து பல பேருந்து வழித்தடங்கள் அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்வதற்கு ஹரிராயா ஹாஜி மற்றும் வெசாக் தினத்திற்கு முந்தைய நாட்களான மே 26 மற்றும் மே 30 ஆகிய நாட்களில் போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட உள்ளது.
இந்த தகவலை SMRT மற்றும் SBS Transit இன்று (மே 12) தனது பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
இந்த 2 விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாட்களில் டவுன்டவுன் லைன் மற்றும் நார்த்ஈஸ்ட் லைன் MRT மற்றும் செங்காங்-புங்கோல் MRT ஆகியவை தங்களது சேவைகளை 30 நிமிடங்களாக நீட்டிக்க உள்ளன.
சேவை நேரங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: 👉நார்த் சவுத் லைன் மற்றும் ஈஸ்ட் பெஸ்ட் லைனில் கடைசி ரயில் நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும். 👉மெரினா பே MRT -யை நோக்கிய சர்க்கிள் லைனில் கடைசி ரயில் இரவு 11:57 மணிக்கு புறப்படும்.
👉ஹார்பர்ஃபிரண்ட் MRT-யை நோக்கியக் கடைசி ரயில் இரவு 11:30 மணிக்கு புறப்படும். 👉தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் லைனைப் பொறுத்தவரை, உட்லண்ட்ஸ் நார்த் பெவர்லி ஹில்ஸ் நிலையங்களுக்கானக் கடைசி ரயில்கள் நள்ளிரவு 12:00 மணி மற்றும் 12:12 மணிக்கு புறப்படும்.
நீட்டிக்கப்பட்ட சுரங்கப்பாதை சேவையுடன் இணைந்து, 222, 410W மற்றும் 181 வழித்தடங்கள் உட்பட 53 பேருந்து வழித்தடங்களின் சேவை நேரங்களும் நீட்டிக்கப்பட உள்ளது.