சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..??

சிங்கப்பூரில் புதிய மிதிவண்டி பாதைகள்..!! எங்கே..??

சிங்கப்பூரில் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) புதிய மிதிவண்டி பாதைகளை அமைக்க உள்ளது.

இது குறித்த செய்தியை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (மே 11) முகநூலில் பதிவிட்டுள்ளது. பொதுமக்கள் இனி வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் இந்த புதிய மிதிவண்டி பாதைகள் இருக்கும் என்று அறிவித்துள்ளது.


மிதிவண்டி ஓட்டுபவர்கள், ஸ்கூட்டர் பயன்படுத்துபவர்கள் மற்றும் பாதசாரிகளின் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 50க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களுக்கு பின்னால் மாற்றுப் பாதைகளை LTA அமைத்துள்ளது.

அகலப்படுத்தப்பட்ட நடைபாதைகளுடன் இணைந்து, 1.2 கிலோமீட்டருக்கும் அதிகமான மேற்கூறியிட்ட நடைபாதைகளும் இதில் அமைந்துள்ளது.

 

மேலும் குடியிருப்பாளர்கள் அந்த பாதுகாக்கப்பட்ட நடைபாதைகள் வழியாக நடந்து செல்வதையும் LTA அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர்.

கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் மிதிவண்டி பாதைகள் சேர்க்கப்பட்டிருப்பது மிதிவண்டி வலையமைப்பின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை குறிக்கிறது.

இது இணைப்பை மேம்படுத்துவதாகவும் அதோடு குடியிருப்பாளர்கள் சில நிமிடங்களில் அருகில் உள்ள மிதிவண்டிப் பாதைக்கு செல்லவும் உதவுகிறது.

புக்கிட் படோக், கிளமெண்டி, ஜூரோங் வெஸ்ட் மற்றும் குயின் ஸ்டார் ஆகிய பகுதிகளில் சுமார் 30 கிலோமீட்டர் நீளமுள்ள மிதிவண்டி பாதைகள் இடம்பெற உள்ளன. இதனால் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதியை இது வழங்கும் LTA கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK